இரத்மலானை இரத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் 20வது நிறைவாண்டு விழா.

இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் 20வது நிறைவாண்டு விழா 02.04.2011ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

எனவே இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்" ரோகித பதிரகே பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்த அதேநேரம் இந்நிகழ்வுக்காக இரத்மலானை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" சுமங்கள டயஸ் ,மேலும் அப்பிரிவின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" பந்துல ஹேரத் உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத்தொடர்ந்து இதனை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி ,சங்கீத கதிரைப்போட்டி என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு கலந்து கொண்ட அனைவரும் இதில் பங்குபற்றி மகிழ்ந்தமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு  01.04.1991ம் திகதியன்று இரத்மலானை விமானப்படை முகாமில் இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதுடன் ,கடந்த 20 வருடங்களாக தாய்நாட்டிற்காக பல்வேறு இலத்திரனியல் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.