விமானப்படையின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் .

இலங்கை விமானப்படையின் புத்தாண்டு கொண்டாட்ட  விழா கடந்த 11-04- 2011ம் திகதியன்று கொழும்பு  "றைபல் கிறீன் " மைதானத்தில் இடம்பெற்றது.எனவே இவ்விழாவானது இலங்கை விமானப்படையின் கட்டளை அதிகாரி " எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள்  உட்பட விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இங்கு வழமைக்கு மாற்றமாக  விமானப்படையினர் தமது உத்தியோகபூர்வ  சீறுடையில் இல்லாமல் பாரம்பரிய  உடையுடன் இதில் பங்கு பற்றியமை  விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு பாரம்பரிய முறைப்படி பெண்கள் இனிப்பு பண்டங்கள் தயாரித்தல், "ரபான் அடித்தல்" , "கொட்டப்பொர" , "கனாமுட்டி உடைத்தல்" ,ஊஞ்சள் ஆடுதல் , "கிறீஸ்மரம்ஏறுதல்" , போன்ற விளையாட்டுக்களுடன், புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசி தெரிவு செய்தல் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு  விமானப்படையின்  இயக்குனர்கள்,அதிகாரிகள்  உட்பட ஏனைய படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.