மேசைபந்தாட்டப்போட்டியில் விமானப்படையனி வெற்றி

இலங்கை விமானப்படையனி "கிறிஸ் குணரத்ன " மேசைப்பந்தாட்டப்போட்டியில்  வெற்றியீட்டியதுடன், போட்டியானது இம்மாதம் 08ம் திகதி  தொடக்கம் 10ம் திகதி வரை கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

எனவே இச்சுற்றுப்போட்டியானது ஆண்,பெண் எனும் இரு பிரிவுகளாக மொத்தம் 7 போட்டிகள் இடம்பெற்றதுடன் இங்கு ஆண்கள் பிரிவில் விமானப்படையின் AC ரொஷான் சிறிசேன , கடற்படையின் டினேஷ் தேஷப்பிரியவினை தோற்கடித்து வெற்றியீட்டிய அதேநேரம் பெண்கள் பிரிவில் AC இஷாரா மதுரங்கி அம்பலங்கொடை  தர்மாஷோக வித்தியாலயத்தின் எரந்தி வருஷவிதானவினை தோற்கடித்து வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு பிரதம அதிதியாக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையாளர் திரு. மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.