முகாம்களுக்கிடையிலான ரக்பி சுற்றுப்போட்டி

இலங்கை விமானப்படை ஏகல முகாமானது ,கடுநாயக விமானப்படை ரெஜிமென்ட் பிரிவினை தோற்கடித்து வெற்றியினை சுவீகரித்துக்கொண்ட  அதேநேரம்  போட்டியில் 18 அணிகள் பங்குபற்றியதுடன் ,போட்டியானது 21.06.2011ம் திகதியன்று கடுநாயக்க விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

எனவே இங்கு போட்டியின் முதற்சுற்றில் கடுநாயக்க ரெஜிமென்ட் பிரிவானது 08-07 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தாலும் பின்னர் ஏகல முகாமின்  சாஜன்ட் லஸந்த பன்டார , AC டினூஷ ரத்னவீர ,"பிளைட் லெப்டினென்ட்"  டினேஷ் வீரரத்ன ,AC திசேரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் இறுதியில் 15-08 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மேலும் இங்கு இலங்கை ரக்பி ஒன்றியத்தின் தலைவர் திரு. லசித குனரத்னஅவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அதேநேரம்  ,கடுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரனில் குருசிங்க உட்பட மேலும்  பல அதிகாரிகலும் கலந்து சிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.