5வது உலக மெய்வல்லுனர் போட்டி
பிரேசில் ரியோ ஜெனேரியாவில் இடம்பெற்ற 5வது உலக இராணுவ மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை தரைப்படை ஆகியன இணைந்து 2 வெண்கலப்பதக்கங்களை வெண்றது.
எனவே இங்கு சுமார் 100 நாடுகளில் இருந்து 7000 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில் இலங்கை அணி சார்பாக எயார் வைஸ் மார்ஷல் அநுர சில்வா ஜூடோ அணியின் தலைவராகவும் ,எயார் கொமடோர் எ.பி. அபேசேகர மெய்வல்லுனர் பயிற்ச்சியாளராகவும் ,எயார் கொமடோர் ஹர்ஷ பெர்னான்டு பிரதான போட்டி பொறுப்பாளராகவும் ,விங் கமன்டர் பட்மன் கொஸ்தா ஆண்கள் கரப்பந்தாட்ட அணியின் தலைவராகவும் ,ஸ்கொட்ரன் லீடர் எம்.சி.எம். பெர்னான்டு பெண்கள் கரப்பந்தாட்ட அணியின் தலைவராகவும் செயர்பட்டனர்.
எனவே இங்கு விமானப்படை சார்பாக ரனில் ஜயவர்த்ன மற்றும் கோப்ரல் சந்திரிகா ரஸநாயக ஆகியோர் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.













