சேவா வனிதா பிரிவு அங்கத்தவர்களுக்கான அலங்கார கருத்தரங்கு

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களுக்கான அலங்கார கருத்தரங்கு கடந்த 30.07.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலும் இக்கருத்தரங்கானது ஆளுமை விருத்திற்கான இமேஜ் கல்லூரியின் ஸ்தாபகரும் ,சலூன் நயனாவின் உரிமையாளருமான திருமதி .நயனா கருனாரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு ஒரு தாய்,பெண்,மனைவி என்ற வகையில் தமது கடமைகளை எவ்வாறு மேற்கொள்வது அதாவது விழாக்களை ஒழுங்கமைத்தல்,உணவு பராமரிப்பு,சுகாதார பராமரிப்பு,உடை அணிதல் போன்றவைகள் கற்பிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.நீலிகா அபேவிக்ரம ,பிரதித் தலைவர் திருமதி. ரோஷனி குணதிலக மற்றும் விமானப்படை இயக்குனர்களின் மனைவியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திருமதி . நயனா ரம்புக்வெல்ல அவர்கள் திருமதி.நயனா கருனாரத்னவை அறிமுகப்படுத்தியதுடன் ,"ஸ்கொட்ரன் லீடர்" நதீர தந்திரிகே நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரை நிகழ்த்தினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.