இலங்கை விமானப்படை வீரர் ஆசிய குத்துச்சண்டைப்போட்டிக்கு தெரிவு

எதிர்வரும் 03ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை ஆசிய குத்துச்ச்சண்டை போட்டியில் விளையாட விமானப்படை வீரர் ஜயக்கொடி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவே இவரின் தெரிவுப்போட்டி றோயல் கல்லூரி குத்துச்சண்டை வளாகத்தினுள் இடம்பெற்றது.

எனவே இதில் விமானப்படை சார்பாக பங்குபற்றிய  LAC ஜயகொடி 65 Kg எடைப்பிரிவில் முதலாம் இடத்தினையும்  LAC தனுஷ்க 56 Kg எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இதன் இறுதியில் LAC ஜயகொடி இலங்கை சார்பாக கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றதுடன் இவர் கடந்த 07.05.2007ம் திகதியன்று இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டதுடன் பின்னர் தனது அடிப்படை பயிற்ச்சிகளை சீனக்குடா முகாமினுள் முடித்துக்கொண்டு விமானப்படை குத்துச்சண்டை கழகத்தினுள் இணைந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.