இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆரம்ப மாநாடு எதிர்கால ஒத்துழைப்புக்கான களத்தை அமைக்கிறது

இலங்கை இராணுவப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (CMETSL) ஏற்பாடு செய்த முதலாவது இராணுவப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு 16 பெப்ரவரி 2024 அன்று வெலிசர, Wave N' Lake Navy மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற) கலந்து கொண்டார்.

இராணுவ நடவடிக்கைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் தனது உரையின் போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலருக்கு இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் அங்கத்துவச் சான்றிதழ்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

"எதிர்காலத்திற்கான இராணுவ தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் நவீன சவால்களை நிர்வகித்தல்" எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடப்பட்டதுடன், இராணுவ தொழில்நுட்பத் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை செயல்படுத்துவதன் முக்கியத்துவம், நவீன முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரும் இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகமுமான ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க வரவேற்பு உரையை நிகழ்த்தியதுடன், WSO2 இன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சஞ்சீவ வீரவர்ண தலைமையுரையை ஆற்றினார்.

இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரியின் ஆரம்ப மாநாட்டில்  விமானப்படை தளபதி  எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி, ஏனைய முக்கியஸ்தர்கள் மற்றும் முப்படைகளின் பொறியியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.