கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வான் பாதுகாப்பு ரேடார் படையணி 18வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிலைகொண்டுள்ள இலக்கம் 01 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவு தனது 18வது ஆண்டு நிறைவை பல சமூக நடவடிக்கைகளுடன் 2024 மார்ச் 10 அன்று கொண்டாடியது. கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் டி'ஆர்தட்டி மல்லவராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ், கம்பஹா "ஸ்ரீ சலிலதாசனாராம" ஆலயத்தில் "சிரமதான" பிரச்சாரமும் சமய சடங்குகளும் நடத்தப்பட்டன

 அன்றய தினம்  கட்டளை அதிகாரியினால் காலை அணிவகுப்பு பரீட்சனை பரீட்சிக்கப்பதுடன்  அதனை தொடர்ந்து  படைத்தள வளாகத்தில் "கலப்பின கொய்யா"சாகுபடி திட்டம் தொடங்கப்பட்டது.வான் பாதுகாப்புப் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எஸ்.டி.ஜி.எம்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அனைத்துப் படை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் உற்சாகமான விளையாட்டு நிகழ்வுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.