கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் அமர்வுக்குப் பின்னர் இன்று (ஜூலை 26, 2024) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தளபதியின் பரிசோதனையை நிறைவு செய்தார்.

கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் கட்டளைத் அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற கட்டளைத் தளபதியின் ஆய்வு அணிவகுப்பைத் தளபதி மதிப்பாய்வு செய்ததோடு, இரண்டு வாரண்ட் அதிகாரிகள், ஒரு விமான சார்ஜன்ட், மூன்று சார்ஜன்ட்கள், மூன்று கோப்ரல்கள், இரண்டு முன்னணி விமானப் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தளபதி இரண்டு நாள் அமர்வின் போது தளத்தின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். மேலும், கட்டளைத் தளபதி அவர்கள், 01 வழங்கல் மற்றும் பராமரிப்புக் கிடங்கில் உள்ள மொத்தக் கிடங்கு வளாகத்தையும் திறந்து வைத்தார். மேலும் தடகள மைதானத்தில் புதிதாக நிறுவப்பட்ட நீர் தெளிப்பு அமைப்பு, புதுப்பிக்கப்பட்ட GSQ மற்றும் புதுப்பிக்கப்பட்ட அஸ்ட்ரா சினிமா மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து அனைத்து பிறவிகளையும் பார்வையிட்ட தளபதி  அனைவருக்கும் சிறப்பாக செயற்பட்டமைக்காக  தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்  மேலும் கருத்து தெரிவித்த அவர் விமானப்படையின் மிகப் பெரிய ஸ்தாபனமான கட்டுநாயக்கா தளமானது, விமானப்படையின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என தளபதி தனது உரையின் போது வலியுறுத்தினார். மேலும், ஒரு தொழில்முறை விமானப்படையின் சூழலில் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு உறுப்பினரும் அசைக்க முடியாத தொழில்சார் சிறப்பு, நேர்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் தங்களின் முழுப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.


First Day

Second Day

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.