ஈகிள் கோல்ப் கதலினா பதக்க கோல்ப் போட்டிகள் கொக்கல கோல்ப் மைதானத்தில் நிறைவடைந்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின்  வழிகாட்டலின்கீழ் ஈகிள் கோல்ப் கதலினா பதக்க கோல்ப் போட்டிகள்  கொக்கல  விமானப்படை கோல்ப் மைதானத்தில்  கடந்த 2024 ஆகஸ்ட் 17ம் திகதி நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்வானது கோல்ப் போட்டிகளில் இன்னுமொரு பரபரப்பான அத்தியாயமாக  கோல்ப் போட்டியாளர்க்ளுக்கு புதியதொரு அனுபவத்தை பெறக்கூடிய ஒரு விளையாட்டாக அமைந்தது  இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள்  கலந்துகொண்டார்.

இந்த போட்டித்தொடரில்  40 போட்டியாளர்கள்  உயர்மட்ட விருதுகளுக்காக  போட்டியிட்டனர் . இந்த போட்டிகளின்போது  சிறந்த செயலதிறனுக்கான விருதுகளை  ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில்  முறையே  எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் திருமதி  பிரவீனா துனுவில ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.   மொத்தபுள்ளிகளின் அடிப்படையின் தொடரின் இரண்டாமிடத்தை   பெண்கள் பிரிவில் திருமதி மனோரி ஜெயக்கொடியும், ஆண்கள் பிரிவில் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்கவும் (ஓய்வு) பெற்றனர். மேலும் பெறப்பட்ட நிகர மதிப்பெண் அடிப்படையில்   திருமதி பிரவீனா துனுவில மற்றும் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க (ஓய்வு) ஆகியோர் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுக்கான மொத்த புள்ளிகள் பிரிவில் திருமதி பிரவீனா துனுவில மற்றும் விங் கமாண்டர் பிரபாத் விஜேகோன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆகஸ்ட் மாதத்திற்கான கௌரவமான ஈகிள்ஸ் கேடலினா மாதாந்த பதக்கம், மகளிர் பிரிவில் வெற்றியாளராக நிகர மதிப்பெண்ணைப் பெற்ற திருமதி மனோரி ஜெயக்கொடிக்கு வழங்கப்பட்டது, ஆடவர் பிரிவில்  எயார் கொமடோர் எரந்திக குணவர்தன ஆகஸ்ட் மாதத்திற்கான வெற்றியாளர் நிகர மதிப்பெண் மற்றும் ஈகிள்ஸ் கேடலினா மாதாந்திர பதக்கத்தைப் பெற்றார்.

இந்த நிகழ்வில்  விமானப்படை பதவிநிலை பிரதானி  மற்றும் பணிப்பாளர்கள்  மற்றும் அதிகாரிகள்  விமானப்படை கோல்ப் பிரிவின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.