இலங்கை விமானப்படை தியத்தலாவ போர் பயிற்சி பள்ளியின் வெளியேற்று அணிவகுப்பு.

தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பாடசாலையானது இலக்கம் 69 அதிகாரிகள்  கெடட்கள் மற்றும் இலக்கம் 21 பெண் அதிகாரிகள்  கெடட்கள் மற்றும் இலக்கம் 173 நிரந்தர  விமானப்படையினர், இலக்கம் 43 நிரந்தற்ற  மகளிர் விமானப்படையினர் மற்றும் இலக்கம் 41 நேரடி நுழைவு விமானப்படையினர் மற்றும் மகளிர் விமானப்படையினர் ஆகியோரின் அடிப்படை தரை போர் பாடநெறி நிறைவின் வெளியேற்று அணிவகுப்பு   2024  நவம்பர் 08 அன்று நடத்தப்பட்டது.

விமானப்படை வான்   நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, பயிற்சி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா, தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஹுமால் தர்மதாச, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸில்  சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  இந்த அணிவகுப்புக்கு போர் பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கனிஷ்க ஜெயசேகர தலைமை தாங்கினார்.

541 விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப் பெண்களுடன், ஆண்  பெண்  28 அதிகாரி கேடட்கள் தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளியில் தங்களது அடிப்படை போர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர்.


அணிவகுப்பினபின்பு  பேண்ட் வாத்திய குழுவினரின் இசைநிகழ்வும் அணிவகுப்பு சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றது



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.