விமானப்படை விளையாட்டு வீரர்ககள் விமானப்படை தளபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை விமானப்படையின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை விமானப்படை விளையாட்டு கவுன்சிலின் ஏற்பாட்டில் விமானப்படையின் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான கௌரவடுத்தும்  விழா விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  உதேனி ராஜபக்ஷ. அவர்களின் தலைமையில் விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிய 07 விமானப்படை வீர வீராங்கனைக்ளுக்கு விமானப்படை தளபதியினால் பதவி உயர்வு மற்றும் 3 மில்லியன் ரூபாய் நிதி ஊக்கத்தொகையூம்  வழங்கப்பட்டது.

இதன்படி, 6ஆவது ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிரேஷ்ட வான்பப்பிடை வீரர்  ஹசித பெரேரா கோப்ரல் நிலைக்கு பதவி  உயர்த்தப்பட்டதோடு 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விமானப்படை  சிரேஷ்ட வான்படை வீரர் கெவின் பீரிஸ் , சிரேஷ்ட வான்படை வீரர் நிலையில்  இருந்து கோப்ரல் நிலைக்கும், 2024 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கோப்ரல் அமா காஞ்சனா கதிர ஆராச்சி, கோப்ரல் தரத்திலிருந்து சார்ஜன்ட் தரத்திற்கும் பதவி  உயர்த்தப்பட்டார்.

மேலும் விமானப்படை சார்பாக   . நீச்சல், ரக்பி, கிரிக்கெட், பளு தூக்குதல், ஜூடோ, கூடைப்பந்து, டேக்வாண்டோ, உடற்கட்டமைப்பு, வுஷூ, மரதன் மற்றும் பிற விளையாட்டு நிகழ்வுகளில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு  விருதுகள்  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை  அதிகாரி, விமானப்படை பணிப்பாளர் சபை, விமானப்படை விளையாட்டு அணி தலைவர்கள், விமானப்படை விளையாட்டு அணி செயலாளர்கள், விளையாட்டு அணி மேலாளர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆகியோர்  கலந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.