உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் இலங்கையின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட 'பசிபிக் ஏஞ்சல் பயிற்சி 2025' ற்றிகரமாக நிறைவுபெற்றது.

பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் நடைபெற்ற பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் நிறைவு விழா,  இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங்கின் தலைமையில், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் 2025 செப்டம்பர் 12 நடைபெற்றது.

இந்தப் பயிற்சியானது அமெரிக்க பசிபிக் கட்டளைப் படை,  ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை, ஜப்பான் சுய பாதுகாப்புப் படை, மாலத்தீவு தேசிய காவல்படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது, அதே நேரத்தில் இலங்கை கடற்படை மற்றும் இராணுவமும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

பசிபிக் ஏஞ்சல் 2025  பயிற்சிநெறியில் பல உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதன்மூலம்  பல்வேறு நாடுகளிடையே தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.  இந்தப் பயிற்சி உலகளாவிய இராணுவ ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியதுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது. இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் மூலம் பரஸ்பர புரிதல் , கூட்டாகச் செயல்படும் திறன் மற்றும் பிராந்தியத்தில் அவசரநிலைகளுக்குத் தயாராகும் முறைமைகளை மேலும் வலுப்படுத்துகிறது. 

இந்த  பயிற்சியில் அமெரிக்க விமானப்படையின்  (USAF) C-130J விமானம்,  இலங்கை விமானப்படையின்  BEL-412, BEL-212 ஹெலிகாப்டர்கள், கடல்சார் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் பீச் கிங் ஏர் 350 விமானம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்படைக் கப்பல்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டது. 

இந்தப் பசிபிக் ஏஞ்சல் பயிற்சிக்கு இணையாக, மேற்கு மாகாணத்தில் உள்ள அகரகம மாவட்ட மருத்துவமனை ரூ. 40 மில்லியன் செலவில் நவீனமயமாக்கப்படஉள்ளது , அதன்  முதல் கட்ட பணிகள் 2025  செப்டம்பர் 12, அன்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் திருமதி ஜூலி சாங்  அவர்களினால் மருத்துவமனை வளாகத்தில்  தொடங்கி வைக்கப்பட்டன . இதன்போது  நவீனமயமாக்கலுக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து    மருத்துவமனைக்கு ரூ. 8.8 மில்லியன் மதிப்புள்ள  பெரிய மருத்துவ உபகரணம் வலைக்கிவைக்கப்பட்டது  .


Pacific Angel 2025 Closing Ceremony



CIMIC initiative

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.