இரத்மலானை விமானப்படை பாலர் பாடசாலையின் கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இரத்மலானை விமானப்படை முகாமில் பணிபுரியும் சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளுக்காக விமானப்படை 'சேவா வனிதா'அலகினால் நடாத்தப்படும் சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வுகல்'சேவா வனிதா ' அலகின் தலைவி திருமதி 'நெலும் குணதிலக ' தலைமையில் தெகிவலை எஸ்.டி.எஸ். ஜயசிங்க கலை மண்டபத்தில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. சிறு வயதில்  இருந்தே குழந்தைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான சர்வதேச கல்வியினை இப் பாலர் பாடசாலை  வழங்குகின்றது.எனவே கடந்த முழு ஆண்டுகளாக கற்றவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் ,63 மாணவர்களை கொண்ட குழுவினால் நடனம்,இசை, பாடல்,அணிவகுப்பு போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்ரப்பட்டதுடன் இவை அதிதிகளின் பெரும் வறவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.மேலும் இரத்மலானை விமானப்படைத்தளபதி 'எயார் கொமடோர்'டி.எல்.ஸ். டயஸ் மற்றும் அவரது  பாரியார் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.