பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

முப்படையைச் சேர்ந்த 75 உயர் அதிகாரிகள் பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும்
பணியாளர்கள் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகும் வைபவம் 2010 டிசம்பர் மாதம்
13 ஆம் திகதி அன்று பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி
கேட்போர் கூடத்தில் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.   


இந்நிகழ்வில் விமானப் படையைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுள பங்களாதேச்*,*  இந்தியா, பாகிஸ்தான், மற்றும் மாலைத்தீவைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று அதிகாரிகளும், 47 தரைப்படை
அதிகாரிகளும், 11 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 

இலங்கைத் தரைப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகளும், கடற்படையைச் சேர்ந்த 02
அதிகாரிகளும், விமானப் படையைச் சேர்ந்த  வின் கொமான்டர் எம்.ஏ.டீ.ஏ.ஜயதிலக
அவர்களும் “கோல்டன் அவுல்” விருதைப் பெற்றுக் கொண்டனர். விமானப் படையைச்
சேர்ந்த வின் கொமான்டர் சமிந்த விக்ரமரத்ன அவர்கள் “தங்கப் பேனை”(ரன் பன்ஹிந்த)
எனும் விருதைப் பெற்றுக் கொண்டார்.  


வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எள் பீரிஸ் அவர்கள் இந்நிகழ்வில் பிரதான
அதிதியாக கலந்து கொண்டார்.மேலும் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ
அவர்கள், பாதுகாப்பு பிரதானியும்* *விமானப்படை தளபதியுமான எயா ஷீப் மாசல்
ரொஷான் குணதிலக அவர்கள், தரைப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர்
மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.



கோல்டன் அவுல்” விருது

இலங்கை தரைப்படை

மேஜர் ஈ.டபிள்யூ.ஆர்,எஸ்,பீ.எகலபொல

மேஜர் டீ.எம்.வீ.எம்.ஆர்.திசானாயக

இலங்கை கடற்படை

லெப்டினன் கொமான்டர் ஆர். கபூர்

லெப்டினன் கொமான்டர் ஜே.எம்.பீ.எஸ்.பீ.ஜயவீர

இலங்கை விமானப்படை

வின் கொமான்டர் எம்.ஏ.டீ.ஏ.ஜயதிலக

தங்கப் பேனை” (ரன் பன்ஹிந்த) விருது

வின் கொமான்டர் சமிந்த விக்ரமரத்ன



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.