விமானப்படை உயர்தர பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது

விமானப்படையை சேர்ந்த 124 படையினர்கள் இல.18 ஆம் துப்பாக்கி சுடுபவர்களுக்கான உயர்தரப்பயிற்சியை பலாலி விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி அன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.

இந்த உயர்தரப்பயிற்சி மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, சுடுவதற்கான பயிற்சி, காட்டு உயிர் வாழ்வு நிலைத்திடுதல், சிறிய சண்டை யுத்தம், தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை பலாலி முகாமில் கட்டளை அதிகாரியான ஸ்கொட்ரன் லீடர் ருக்மன் தசனாயக அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.

விசேட விருது பெற்றொரின் விபரம்

சிறந்த செயல்திறன்
24707 கோப்ரல் பிரான்க் கெ.எ.எ.டி.டி

சிறந்த உடற்பயிற்சி
24707 கோப்ரல் பிரான்க் கெ.எ.எ.டி.டி

சிறந்த துப்பாக்கி சுடுதல்
26817 கோப்ரல் திலகரத்ன டப்லிவ்.டப்லிவ்.எம்

சிறந்த மாணவன்
26017 கோப்ரல் திசானாயக டி.எம்.யு.எஸ்

சிறந்த உடல் தகு நிலைச்
24707 கோப்ரல் பிரான்க் கெ.எ.எ.டி.டி





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.