விமானப்படை (பி.ஐ.எ) பன்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த கலைவிழா நிகழ்ச்சி கொண்டாட்டம்

விமானப்படை பன்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி 2010 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி அன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்பு படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முகாமில் கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் டப்லிவ்.டப்லிவ்.பி.டி. பெனான்டொ அவர்களும், திருமதி பெனான்டொ அவர்களும் விழாவின் பிரதம அதிதிகளாக கலந்துகொன்டார்கள்.  

ஆரம்ப விழாவில் பிரதம அதிதிகள், முகாமில் கட்டளை அதிகாரி ஆகியோர் இனைந்து பாரம்பரிய குத்து விளக்கை ஏற்றிவைத்தனர்.

மேலும் விமானப்படை “வான் நாய் கையாளுதல்” பிரிவின் விசேட சாகசமிக்க காட்சி நிகழ்ச்சி, “மாயாஜால” காட்சி நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், வாண வேடிக்கை நிகழ்ச்சி, குழந்தைகளின் நடனம், பாடல், சங்கீதம், போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது விசேடம்சமாகும். அத்துடன் விமானப்படையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.