விமானப்படையின் 60 ஆவது ஆண்டு விழா

விமானப்படையின் 60 ஆவது ஆண்டு விழாவின் ஆரம்ப விழா நேற்று வியாழக்கிழமை (2010.12.30) விமானப்படை தலைமையகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ் விழாவின் போது விமானப்படை தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஏயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக விமானப்படையின் 60 ஆவது நிணைவுச் சின்னம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ் விழாவின் மேலும் பல பிரதம அதிதிகள், விமானப்படை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து சிறபித்தனர்.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டதுடன் அப்போது 1200 விமானப்படை வீரர்களுடன் பத்திற்கும் குறைவான விமானங்களே காணப்பட்டன, இன்று நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விமானப்படை விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், வலுவான நிலையிலும் உள்ளது விசேடம்சமாகும்.


மேலும், நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடைவடிக்கைகளின் போது விமானப்படை மிக பெரிதாக தனது சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் 2011 மார்ச் மாதம் நடைபெறவுள்ள விமானப்படையின் 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, வெளிநாடுகளில் உள்ள விமானப்படைத் தளபதிகளும் இலங்கை வரவுள்ளனர். இதன்போது அந்நாட்டு விமானப்படைகளின் சாகசங்களும் காண்பிக்கப்படவுள்ளது விசேடம்சமாகும். இவ்வாராக எமது விமானப்படை மிகவும் கௌரவமான நிலையில் தனது 60 ஆவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கவுள்ளது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.