அசிர எரங்கவின் திறமையான விளையாட்டினால் விமானப்படைக்கு வெற்றி
27- 12 - 2010 அன்று வெலிசற கடற்படை மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை
கிரிக்கெட் பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் இலங்கை
விமானப்படையணி கடற்படையணியை 09 விக்கெட்டுக்களால் தோல்வியடையச்செய்து
வெற்றியினை சூவீகரித்துக்கொண்டது.
முதலில்
துடுப்பெடுத்தாடிய கடற்படையினர் 49 ஓவர்கள் நிறைவில் சகல
விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இதில்
கடற்படையினர் சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உதய ஜயசுந்தர மற்றும்
அனுர வேகொடபொல முறையே 42, 34, ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அத்தோடு
பந்துவீச்சில் விமானப்படை சார்பாக சுழற்பந்து வீச்சாளர்களான அஞ்சலோ
எமானுவெல் மற்றும் அகில இசன்க முறையே 02 விக்கெட்டுக்கள் வீதம்
வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
விமானப்படையணியினர் அசிர எரங்க மற்றும் அஞ்சலோ எமானுவெல்
ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தினால் (157ஒட்டங்கள்) விமானப்படையணியானது
தனது 35 வது ஓவரினிலே வெற்றியினை நிலைநாட்டியதுடன், மேலதிக புள்ளியினையும்
பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.