விமானப்படை கால்பந்தாட்ட அணிக்கு ஓய்வுபெற்ற அங்கத்தவரினால் அனுசரனை

இலங்கை விமானப்படையின் ஓய்வூதியர் சங்கத்தின் முதன்மை அங்கத்தவரும் அரலிய கூட்டு நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. பி.ஜி.டப். சிறிசேன அவர்கள் 2011ம் ஆண்டிற்கான விமானப்படை கால்பந்தாட்ட அணிக்கு அனுசரனை வழங்க முன்வந்தார்.

இவர் கூட்டுப்படைகளின் தலைவரும் விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலகவிடம், கால்பந்தாட்ட அணியின் பிரதம அதிகாரி 'எயார் வைச் மார்ஷல்' ஜயந்த குமாரசிரி மற்றும் உப அதிகாரி 'குரூப் கெப்டன்' சமன் கோடகே முன்னிலையில் 500,000 பெறுமதியான காசோலையினை கையளித்தார்.

இவ்வனுசரனையானது ஹிங்குரங்கொடை வினியோகம்  மற்றும் பராமரிப்பு பிரிவின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' சுரேஷ் பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.